சீதுவை பகுதியில் இன்று (21) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீதுவை , ராஜபக்ஸபுரவில் உள்ள 12வது லேன் பகுதியில் இரவு 8.15 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சீதுவை நகரசபையில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் நகர சபை உறுப்பினர் ஒருவரின் தந்தையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 55 வயது நபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என தெரிவிக்கப்படும் நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சீதுவை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.