உள்நாடுகாலநிலை

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (01) பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தனது சமீபத்திய முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, புத்தளம் மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைக்க, மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

தேசபந்து தென்னகோன் சார்பான சாட்சியமளிப்பு முடிந்தது!

editor

எங்களது போராட்டம் வாழ்வாதாரத்துக்கான போராட்டம்! தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் தாஜுடீன்

ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் – 3 பொலிஸ் அதிகாரிகளுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

editor