உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அநுராதபுரம், தம்புத்தேகம, மகுலேவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மகுலேவ, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இவர் பயிர்களை பாதுகாப்பதற்காக தனது காணிக்கு சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

சுகாதார துறையில் எழுந்துள்ள பாரிய சிக்கல்!

ஐந்து சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு