உள்நாடுபிராந்தியம்

இன்று அதிகாலை களுபோவில பகுதியில் துப்பாக்கிச் சூடு

கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இன்று (15) அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வீட்டின் வாயிலிலும் வீட்டை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய விசாரணைகளின் அடிப்படையில், பண கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கல்கிஸ்ஸை குற்றத் தடுப்பு பணியகம் மற்றும் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இதுவரையில் 2,646 பூரண குணம்

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு

editor

QR குறியீட்டு முறையின் ஊடாக எரிபொருள் விநியோகம் இன்று முதல்