உள்நாடு

இன்றும் 2,481 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,481 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 225,952 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 257,225 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

  

Related posts

19 ஆவது திருத்தத்தினை சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்த பிரதமர் இணக்கம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை உயர்தர மாணவர்களுக்கு ஜின்னா புலமைப்பரிசில் வழங்கி வைப்பு

அரசாங்க விடுமுறை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது