உள்நாடு

இன்றும் 16 1/2 மணித்தியால மின் விநியோகம்

(UTV | கொழும்பு) – தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் 7 மணித்தியாலங்கள் 30 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 5 மணி நேரமும், மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்களும் மின் தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் வாரமளவில் மின்வெட்டு நேரத்தில் கணிசமான அளவினை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!

புதிய புற்களை தேடி உண்டு வரும் 100க்கும் மேற்பட்ட யானை கூட்டம்