வகைப்படுத்தப்படாத

இன்றும் ஹொங்கொங்கில் பாரிய ஆர்ப்பாட்டங்கள்…

கைதிகளை சீனாவிடம் ஒப்படைதற்கு ஏதுவான சட்ட மூலத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் இன்றும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று சில வர்த்தக அமைப்புகளும் போராட்டங்களில் பங்குபற்றவுள்ளன.

குறித்த சட்ட மூலம் இன்று அந்த நாட்டின் பாராளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.

சீன ஆதரவைக் கொண்ட இந்த பாராளுமன்றில், இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.இருப்பினும் மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சட்டத்தின் மூலம் சீன எதிர்ப்பு நிலைப்பாட்டை உடையவர்கள் இலக்கு வைக்கப்பட்டு தண்டிக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

President’s fmr chief of staff & ex-STC chairman served indictments

A/L Examination on Aug. 05

கலிபோர்னியாவில் படகில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு