உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று(29) அனைத்து வலயங்களில் 7 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்துண்டிப்பை மேற்கொள்வதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8.30 முதல் மாலை 6.30 வரையான காலப்பகுதியினுள் 5 மணித்தியாலங்களும், மாலை 6.30 முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 8 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையான காலப்பகுதியினுள் 5 மணித்தியாலங்களும், மாலை 6மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணிநேரமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு தொடர்பிலான அட்டவணை

Related posts

ஆள்மாறாட்டம் செய்த நபர் ஒருவர் கைது

கோஷல நுவன் ஜயவீரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர

editor

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை