சூடான செய்திகள் 1

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTVNEWS | COLOMBO)  – நாடளாவிய ரீதியாக மழையுடனான காலநிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையில் மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில் இடிமின்னல் மற்றும் கடும் காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

SLIDA பசுமை வாரம் கண்காட்சி ஆரம்பம்

ஐ.ம.சக்தி : தேசியப்பட்டியல் பெயர் அடங்கிய விசேட வரத்தமானி அறிவித்தல்