உள்நாடு

இன்றும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஓரளவு பலத்த காற்றும், இடி மின்னல் தாக்குதல்களும் இடம்பெறும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எதிர்வு கூறியுள்ளது.

    

Related posts

தமிழர்களின் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்ச்சி வேதனைக்குரியது!

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

“2023 வலிமிகுந்ததாக இருக்கும்” : IMF