உள்நாடு

இன்றும் பல இடங்களில் மழை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் இன்று (17) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

Related posts

நாளை முதல் பல்கலைக்கழகங்கள் திறப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )