உள்நாடு

இன்றும் நாளையும் நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – வத்தளைப் பகுதியில் இன்று(03) காலை 10 மணி தொடக்கம் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று(03) காலை 10 மணி தொடக்கம் நாளை(04) காலை 10 மணி வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

ஹெந்தலை பாலம் வழியாக நீர்க்குழாய் இணைப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வத்தளை, நீர்கொழும்பு வீதியில் சில பகுதிகள், மாபொலவில் ஒரு பகுதி, வெலிகடமுல்ல, ஹெந்தலை வீதி நாயக்கந்த சந்தி வரையிலான அனைத்து கிளை வீதிகள், எல்விஸ் ஒழுங்கை, மருதானை வீதி, புவக்வத்த வீதி, கலகஹதுவ, கெரவலபிட்டியவில் சில பகுதிகளில் நீர் விநியோக நடவடிக்கைகள் தடைப்படவுள்ளன.

   

Related posts

இ.போ.ச. பேரூந்து சேவைகள் மந்தமாகிறது

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor

ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வுக்கு – பிரதமர் விசேட உரை