உள்நாடு

இன்றும் நாளையும் இரவு நேர மின்வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இன்றும், நாளையும் இரவு வேளைகளில் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படமாட்டாது என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பகல் வேளையில் A,B மற்றும் C வலயங்களில் 3 மணித்தியாலயங்களும், ஏனைய வலயங்களில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 38,400 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான உலை எண்ணெய் தாங்கிய கப்பலை அடுத்த வாரம் நாட்டிற்கு வரவழைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

வழங்குவதாக கூறிய உர மானியத்தை ஏன் முறையாக வழங்கவில்லை ? எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

editor

MT New Diamond கப்பலில் மீண்டும் தீ பரவல் 

பணமில்லையால் இலங்கையின் பிரதான சேவை இருளில்…!