உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றும் தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதியினால் மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலையும் சவாலுக்கு உட்படுத்தி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலனை இன்று (20) மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய நீதியரசர்கள் புவனெக அலுவிகார ,சிசிர ஆப்ரு ,பியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று (20) மேற்கொண்டிருந்தனர்.

Related posts

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்