உள்நாடு

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியாக இன்றும் (10) மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு தொடர்பிலான அட்டவணை

Related posts

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் இரகசிய வாக்குமூலம்

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகம் மீது கல்வீச்சு