உள்நாடு

இன்றும் சுமார் 5 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்றைய தினம் நாட்டில் சுமார் 5 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏ,பி,சி குழுக்களுக்கு சுழற்சி முறையில் 4.40 மணித்தியால மின்வெட்டும், ஏனைய குழுக்களுக்கு குறித்த காலப்பகுதியில் 4.30 மணித்தியால மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.

காலை 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த மின்வெட்டு சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, இதுவரை மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாத பிரதேசங்களுக்கும் இன்றைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலைகளின் இரண்டாம், மூன்றாம் தவணை பற்றிய அறிவிப்பு

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

ஜனாதிபதி ஜப்பானுக்கு