உள்நாடு

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இல்லை – லிட்ரோ

(UTV | கொழும்பு) – இன்றைய தினமும் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருப்பதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம் பொது மக்களைக் கோரியுள்ளது.

நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் வரையில், எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க இயலாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3,500 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

7,500 மெட்ரிக் டன் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக, 6.5 மில்லியன் டொலர் கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

கொட்டகலையில் 10 வீடுகள் கொண்ட குடியிருப்பில் தீ விபத்து

editor

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவுறுத்தல்!

சிகிச்சைகளை தவிர்ப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை