உள்நாடு

இன்றும் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் 9 சடலங்கள் அடக்கத்திற்கு

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பு – ஓட்டமாவடி – சூடுபத்தினசேனை பகுதியில், இன்றைய தினம் மேலும் சில கொவிட்-19 சடலங்கள அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக கொவிட்-19 சடலங்கள் ரீரங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டன.

சூடுபத்தினசேனை பகுதியில் 9 கொவிட்-19 சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் குறித்த பகுதியில் 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரேத அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜனாஸாக்களும் அடுத்துவரும் நாட்களில் கிழக்கிற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

எரிவாயு விவகாரம் : ஆராய நாளை விசேட ஆலோசனைக் குழு கூடுகிறது

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் விபரம்

Online சட்டமூலம் தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு!