உள்நாடுகாலநிலை

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

புகையிரத சேவைகளில் தாமதம்

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி

மேலும் 311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி