வகைப்படுத்தப்படாத

இன்றுமுதல் அதிவேக வீதியின் வேக அளவீட்டு இயந்திரக் கட்டமைப்பு

(UTV|COLOMBO)-அதிவேக நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாகன வேகத்தை கட்டுப்படுத்துவதற்கான வேக அளவீட்டு இயந்திரக் கட்டமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனூடாக வாகனங்களின் வேகம் கண்காணிக்கப்படுவதுடன், வேகக் கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் புகைப்படங்கள் வௌியேறும் வாயிலில் இருக்கும் கணினி ஊடாக அச்சிடப்பட உள்ளது.

இந்தப் புகைப்படங்களில் வாகன இலக்கம், கண்காணிப்பு நேரம் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் பயணித்த வேகம் போன்ற தகவல்கள் அச்சிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வருடாந்தம் இடம்பெறும் விபத்துக்களில் 27சதவீதமானவை அதிக வேகத்தினால் இடம்பெறும் விபத்துக்களாகும். இதை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டமைப்பு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து சுற்றுலாப் பொலிஸ் பிரிவினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த செயற்பாடுகளை இரவு நேரங்களிலும் முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

A/L Examination on Aug. 05

Andy Murray to partner Serena Williams in Wimbledon mixed doubles

ஆவா குழுவுடன் தொடர்புடைய இளைஞன் கைது