வகைப்படுத்தப்படாத

இன்டர்வியூ நடத்தும் நவீன ரோபோ…

(UTV|SWEDEN) சுவீடனில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மனித வள முகாமையாளர் பணிக்காக ரோபோ ஒன்று, பெண் போன்ற முக அமைப்பில், நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கி உள்ளது. இது மிகவும் நுட்பமான கணினி மொழிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

இது குறித்து ரோபோ வடிவமைப்பாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது:

சுவீடனில் உள்ள படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 73 சதவீதம் பேர், பாலினம், வயது மற்றும் தோற்றம் போன்றவற்றால் பணி கிடைப்பதில்லை என தெரிவித்திருந்தனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் மனித வள முகாமையாளர் பணிக்காக  ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பெண்ணின் முக அமைப்பு கொண்டதாகும். இதற்கு தங்காய் என பெயரிடப்பட்டுள்ளது.

Related posts

சீன அரசின் அதிரடி உத்தரவு…

Sudan suspends schools after student killings

3,493 drunk drivers arrested within 12 days