அரசியல்உள்நாடு

இனி இனவாதத்திற்கு இடமில்லை – திருகோணமலை சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரிய ஜனாதிபதி அநுர

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் (18) பாராளுமன்றத்திற்கு வருகை தந்துயிருந்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத் திகதி நீடிப்பு

editor

பல பிரதேங்களில் நாளை 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

கடந்த 24 மணி நேரத்தில் 639 : 04 [COVID UPDATE]