உள்நாடுசூடான செய்திகள் 1

இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் – பசில் ராஜபக்‌ஷ

(UTV | கொழும்பு) –

“உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும். இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் நடைபெற வேண்டும்.

தேர்தலைப் பிற்போட்டு அதில் அரசியல் நடத்த எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல.” – என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கரையோர வாழ் மக்கள் அவதானம்

கொவிட் – 19 தொடர்பில் மக்கள் முறைப்பாடுகளுக்கு புதிய இலக்கம் அறிமுகம்

சிரமதான பணியின் போது குளவி கொட்டுக்கு இலக்காகி 50 பேர் மருத்துவமனையில்