உள்நாடு

இந்த வருடத்தில் 40,633 டெங்கு நோயாளர்கள் – 22 பேர் மரணம் – இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரின் ஆலோசனையை பெறவும்

2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட அவர், கண்டறியப்பட்ட நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிக ஆபத்துள்ள 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே குறித்த காலப்பகுதியில் டெங்கு நோயினால் 22 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

எனவே, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை முடிந்தவரை அழித்து சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் வைத்தியர்களின் உரிய ஆலோசனையை பெறுமாறு பொதுமக்கள் அறிவறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு 100% சேவையாற்றவில்லை

15 உயிர்களைப் பறித்த எல்ல பேருந்து விபத்து குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்

editor

நெல் கொள்வனவுக்கான விலையில் திருத்தம்