உள்நாடு

இந்த மாதம் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  இம்மாதம் 27ஆம் திகதியுடன் முடிவடையும் அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படாது என்ற நிலை உருவாகியுள்ளது.

காரணம் கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 27ம் திகதிக்குள் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்து, ஒரு மாதம் கழிவதற்குள் மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும்.

இந்தச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டால், ஒரு மாதத்துக்கும் மேலாக அது மீண்டும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எனவே ஆகஸ்ட் 27ம் திகதிக்கு பிறகு இந்த சட்டம் தானாகவே ஒழிந்து விடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related posts

மண்ணெண்ணெய் விலை குறைப்பு – பெற்றோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை

editor

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா

 மீண்டும் இலங்கையர்களுக்கு e-visa அனுமதி