உலகம்

இந்தோனேஷியா சிறை விபத்தில் 40ஐ தாண்டிய பலிகள்

(UTV | இந்தோனேஷியா) – இந்தோனேஷியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேஷியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சிறை அறைகளுக்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பலர் வெளியேற முடியாமல் சிக்கி உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று தீயை அணைத்தனர்.

இந்த கொடூர விபத்தில் சிறை கைதிகள், காவலர்கள் உட்பட 41 பேர் சோகமாக பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் காலமானார்

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

editor

இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!