வகைப்படுத்தப்படாத

இந்தோனேஷியா இலங்கைக்கு உதவி!

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் பல பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய வௌவிவகார பிரதி அமைச்சர் .எம்.பஷீர் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

ஐனாதிபதி காரியாலயத்தில இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி , இந்தோனேஷியா அரசால் இந்நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கவுள்ள உதவி தொடர்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் , இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடா , அந்நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துள்ளதாக இதன் போது கருத்து தெரிவித்த இந்தோனேஷிய வௌிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Related posts

Update : நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் பலி

සරම්ප රෝගය තුරන් කළ සිව්වෙනි රට ශ්‍රී ලංකාවයි

Crazy Jets brings in Miles on the Fly™ for Sampath Credit Cardholders