உலகம்

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV |  ஜகார்தா) – இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்களை பீதிக்குள்ளாக்கியது.

இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் திகழ்ந்து வருகிறது. இங்கு உள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 4 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின.

அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கம் 6.2 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்தோனோஷிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர். இதேபோல் கடந்த ஆண்டு மேற்கு சுலாவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள். 6,500 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.

சிறுவனின் உயிரைப் பறித்த ஓட்டப் பந்தயம்!

கொரோனாவுடன் இணைந்த வௌவால் வைரசுகள்