வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|INDONESIA)-இந்தோனேசியா நாட்டின் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெர்னட்டே நகரில் வடக்கே-வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.

இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Ruhunu Uni. temporarily closed

வித்தியா படுகொலை வழக்கு – ‘விசாரணைமன்று’ அடிப்படையிலான 2ஆம் கட்ட விசாரணைகள் ஆரம்பம்!

2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு?