வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 59 ஆக உயர்வு

(UTV|INDONESIA)-இந்தோனேசியா மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த பகுதியாகும். இதன் தெற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று காலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் தென் சுலவேசியில் வீடுகள், பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த துயரச் சம்பவத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 10 பேர் காணாமல் போனதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக நேற்று அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஒரே நாளில் 34 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. மேலும், காணாமல் போன 24 பேரை தேடி வருகின்றனர். சுமார் 3 ஆயிரத்து 400 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

Jeong, Daley join the “Tom and Jerry” movie

ACMC Deputy Leader resigns from party membership

HIV நோயாளர்களுக்கு ஓர் நற்செய்தி!