உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இன்று (27) காலை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 10:26 மணியளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தயவுசெய்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பான எதிர்கால அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், ஊடகங்கள் வாயிலாக வழங்கப்படும் மேலதிக தகவல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

(VIDEO) துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிரபல தேரர் ஜப்பானில் கைது!

QATAR FIFA2022 கால்பந்து சாம்பியன் அணிக்கு பரிசுத்தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

காசா மீது மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பது நல்லதல்ல – ஜான் கிர்பை