வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்தது

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான பாரியளவு எரிபொருள் திருட்டு

கொழும்பு நகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள குப்பை பிரச்சனை