இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளார்.
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (22) இலங்கையை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
‘டிட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை மேலும் உறுதிப்படுத்துவதே இந்திய வெளியுறவு அமைச்சரின் இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
