அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா இன்று (16) புது டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிது எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவொன்றை வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், புது டெல்லியில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் பதவிட்டுள்ளார்.

“இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம்,” என்று அவர் தனது ‘எக்ஸ்’ பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியா ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பதுடன், இந்த காலப்பகுதியில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல உயர்மட்ட இராஜதந்திர பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.

“நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றத்தை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் நாளை நடைபெறும் NDTV உலக உச்சி மாநாட்டில் அவர் முக்கிய உரையை நிகழ்த்த உள்ளார்.

மேலும், கல்வி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர் அமரசூரிய, கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்காக டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மற்றும் NITI Aayogக்கும் செல்ல உள்ளார்.

Related posts

நோயாளிகள் மன ரீதியாக குணமடையும் இடமாக மருத்துவமனை மாற வேண்டும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

பூஸா சிறையில் கொல்லப்பட்டவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை!

editor

எரிபொருளுக்காக புதிய QR முறைமை