டித்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதியுதவியில் இருந்து, இந்த முதற்கட்டப் புனரமைப்புப் பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான ரயில்வே கட்டுமான நிறுவனத்தினால் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு ரயில் மார்க்கம் மஹவ முதல் ஓமந்தை வரை, ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரை, மதவாச்சி முதல் மன்னார் வரை என மூன்று கட்டங்களின் கீழ் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
