வகைப்படுத்தப்படாத

இந்திய கப்பல் வெள்ள நிவாரண பொருட்களுடன் இலங்கை வந்தடைந்தது

(UDHAYAM, COLOMBO) – வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களுடன் இந்தியக் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் , வைத்திய குழு மற்றும் வைத்திய உபகரணங்களுடன் குறித்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த நிவாரண பொருட்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன்வருமாறு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்தியா உடனடியாக பதில் அளித்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இரண்டாவது கப்பல் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

பொதுமன்னிப்புக் காலத்தில் சரணடையாத 2023 இராணுவத்தினர் கைது

கொழும்பு பிரதேச குப்பைகள் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு பிரதமர் நடவடிக்கை