உள்நாடு

இந்திய உர விவகாரம், உண்மைக்குப் புறம்பானது – பி.பீ

(UTV | கொழும்பு) – ‘இந்திய உர வகைகளுக்கு வழங்குவதற்காகத் தனிப்பட்ட கணக்கில் 29 கோடி ரூபா வைப்பு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர தலையீடு’ என்ற தலைப்பில், வார இதழில் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானதும் வெறுக்கத்தக்கதுமான செய்தியாகும் என ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு வங்கியில் தான் தனிப்பட்ட கணக்கு ஒன்றினை தொடங்கியதாக கூறிய அறிக்கை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய வானிலை அறிக்கை

அனைத்து இனங்கள் – மதங்கள் சமமாக கருதப்படும்

உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்தனர்