100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் சனிக்கிழமை (10) திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவும் கலந்து கொண்டார்.
இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ரானலை வீதியில் உள்ள B-492 வீதியில் இந்திய இராணுவத்தின் 19வது பொறியாளர் படைப்பிரிவால் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது.
தித்வாவுக்குப் பின்னர் மீள் கட்டமைப்புக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடக்கத்தை இது குறிக்கிறது.
2025 டிசம்பர் 22 மற்றும் -23 அன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வருகையின் போது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செயல்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
