அரசியல்உள்நாடு

இந்தியா செல்லும் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) காலை இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது ரணில் விக்கிரமசிங்க மத்திய இந்தியாவில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர்கல்வி நிறுவனத்தில் விரிவுரை ஒன்றையும் நடத்த உள்ளார்.

இந்த அமர்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) மாலை 6 மணிக்கு உயர்கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புஸ்ஸலாவ பஸ் விபத்து – 8 பேர் காயம்

சஜித் தலைமையிலான அரசு வந்தால் ஜனாதிபதி மாளிகை பல்கலைக்கழகமாக மாறும் – ஹரீஸ் எம்.பி

editor

பொதுத் தேர்தல் – வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்