விளையாட்டு

இந்தியாவை எதிர் கொண்டு மேற்கிந்தியத்தீவுகள் 125 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வி

(UTV|COLOMBO) ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை குவித்தது.

269 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்திய அணியின் பந்து வீச்சுகளில் நிலைகுலைந்து 34.2 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 125 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

 

Related posts

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரருக்கு பந்துவீச தடை

ஒருநாள் சுற்றுத்தொடரில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றி