உலகம்

இந்தியாவுடனான நட்புறவை முறித்து கொள்ளாதீர்கள் – நிக்கி ஹேலி

இந்தியா போன்ற வலுவான நாட்டுடனான நட்புறவை முறித்துக் கொள்ளாதீர்கள் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக வரிகளை கணிசமான அளவில் அதிகரிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள பின்புலத்தில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைத் தொடர்ந்து கொள்வனவு செய்வதால், அடுத்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை தற்போதைய 25 விகிதத்தில் இருந்து மிகக் கணிசமாக உயர்த்தப் போவதாக ட்ரம்ப் கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப் தமது ட்ரூத் சமூக வலைத்தளத்தில், ‘இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக இலாபத்திற்கு விற்பனை செய்கிறது.

ரஷ்யப் போரால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது அவர்களுக்கு கவலையில்லை.

அதனால் அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்தும் கட்டணத்தை நான் கணிசமாக உயர்த்துவேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் நிக்கி ஹேலி மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது.

ஆனால், ரஷ்யா மற்றும் ஈரானிய எண்ணெயை அதிகளவில் வாங்கும் சீனாவுக்கு அளிக்கப்பட்ட 90 நாள் வரிவிலக்கு நிறுத்தப்பட்டது.

சீனாவுக்கு அனுமதி கொடுத்து இந்தியா போன்ற வலுவான நட்பு நாட்டுடனான உறவை முறித்துக் கொள்ளக்கூடாது.

இது அமெரிக்காவுக்கே பாதிப்பாக அமையும் என்றுள்ளார். ஏ.என்.ஐ.

Related posts

பிலிப்பைன்ஸை தாக்கிய புயல் – 16 பேர் பலி

சீனாவிற்கான அனைத்து விமானங்களும் இரத்து

ஓமிக்ரானால் புது வகை வைரஸ் உருவாகலாம் – WHO