அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

இந்தியாவில் முக்கியஸ்தர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கை நாட்டின் விவசாய புத்தாக்கத்திற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தாருங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லி பூசாவில் அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (IARI) விஜயம் செய்து கோரிக்கை விடுத்தார்.

இந்நாட்களில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, புது டில்லி பூசாவில் அமைந்து காணப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (Indian Agricultural Research Institute-IARI) விஜயம் செய்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் (ஆராய்ச்சி) டாக்டர் சின்னுசாமி விஸ்வநாதன் மற்றும் நிறுவனத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

மனித மேம்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்பை பூர்த்தி செய்து கொள்வதில் விவசாயத்தின் முக்கிய வகிபாகம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடினார். இங்கு, விவசாய ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டன. விவசாயத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக முன்னேற்றம் மற்றும் விவசாயம் தேசிய மீள்தன்மையின் இதயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இந்த கலந்துரையாடலின் ஆரம்பித்தில் சுட்டிக்காட்டினார்.

உணவுப் பாதுகாப்பு நான்கு முக்கிய பரிமாணங்களை உள்ளடக்கியுள்ளன. உணவு கிடைத்தல் (Availability), உணவுக்கான அணுகல் (Access), உணவு பயன்பாடு (Utilization) மற்றும் நிலைத்தன்மை (Stability) எனும் இவற்றை பூர்த்தி செய்து கொள்வது பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஊக்குவிக்கும் அதே வேளையில், பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மோதல்களைக் குறைத்துக் கொள்வதனை உறுதி செய்யும் என்றும் அவர் இங்கு தெளிவுபடுத்தினார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் சுமார் 16 சதவீத பங்களிப்பைப் பெற்றுத் தரும் அதேவேளை, இலங்கையில், கிட்டத்தட்ட 8 சதவீத பங்களிப்பையே பெற்றுத் தருகிறது என்று ஒப்பீட்டு புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு குறிப்பிட்டார்.

எனவே, இந்தியாவின் பல விவசாயப் புரட்சிகள் மற்றும் நிலையான கொள்கைகளிலிருந்து இலங்கை கற்றுக்கொள்வதற்கு பல பாடங்கள் காணப்படுகின்றன என்றும், இந்தியா தனது தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாய புத்தாக்கம் மற்றும் நிறுவன திறன் மேம்பாட்டிற்கு இந்தியாவின் அணுகுமுறையிலிருந்து இலங்கை பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

உணவுப் பாதுகாப்பை பூர்த்தி செய்து கொள்வதற்கும் அதன் விவசாய நடைமுறைகளை நவீனமயமாக்குவதற்கும் இலங்கை நிறுவனங்களுடன் நெருக்கமாக ஒத்துழைப்புடன் பணியாற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, IARI மற்றும் தொடர்புடைய இந்திய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இறுதியாக, ஆராய்ச்சி கூட்டாண்மைகள், அறிவு பரிமாற்றம், ஆரம்ப முன் பதிவு, துல்லிய வேளாண்மை, காலநிலை மாதிரியாக்கம், உரத்தின் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியமான பல பரப்புகள் இங்கு அடையாளம் கண்டுகொள்ளப்பட்டன.

இந்த கலந்துரையாடல் சந்திப்பு தனக்கு பெறுமதியான தெளிவைப் பெற்றுத் தந்தது என்றும், இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைகளுக்காக இலங்கை மற்றும் இந்தியா, விவசாய புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் நிலைத்தன்மை தொடர்பான ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என்று நம்புகிறேன் என்று ஆராய்ச்சி நிறுவனத்துக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சசி தரூரைச் சந்தித்தார்.

இந்திய விஜயத்தின் மற்றுமொரு முக்கியமான நாளான இன்று புது டில்லியில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான டாக்டர் சசி தரூர் அவர்களைச் சந்தித்தார்.

ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல், இரு நாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்தல் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இங்கு இருதரப்பினரும் அவதானம் செலுத்தினர்.

இங்கு, இரு தரப்பினரிடையே இரு நாடுகளினதும் அபிவிருத்தி சார் பல விடயங்கள் குறித்தான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பாராளுமன்ற ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் சஜித் பிரேமதாச மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற செயல்முறை தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் அவதானம் செலுத்தி பெறுமதியான கலந்துரையாடல் நிமித்தம் இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்தார்.

நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்றத்தினுள் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே இங்கு பல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை பாராளுமன்றத்திற்கும் இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாராளுமன்ற ஒருமைப்பாட்டினது மதிப்புகளுக்காக இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகளை இச்சந்திப்புச் சுட்டிக்காட்டின.

இந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மக்களவை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள புதிய சபாநாயகர் அலுவலகத்தைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைக்கப்பட்டார்.

இங்கு, அதிநவீன வசதிகளையும், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, காகிதமில்லாப் பாராளுமன்ற இயக்க முறைமைக் கட்டமைப்பு, நவீனமயமான சட்டமன்ற நிர்வாகம், செயல்திறன் தொடர்பான மாதிரியையும் இதன்போது கண்டுகொள்ள முடிந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்தார்

இந்நாட்களில் இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்திற்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரை புது டில்லியில் சந்தித்தார்.

இந்திய-இலங்கை கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, தொடர்புகள் மற்றும் பரஸ்பர முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினரின் அர்ப்பணிப்புகள் குறித்து பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக, அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள், இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டுமொரு முறை, மீண்டெழுந்து நிற்பதற்குத் தேவையான பயன்பெறும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா பெற்றுத் தந்தமைக்கு தலையீடு செய்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சியைத் திட்டமிடுவதற்காக இன்றைய காலத்தைப் பயன்படுத்துவது குறித்து பல கருத்துக்களை டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இங்கு முன்வைத்தார்.

இலங்கைப் பொருளாதாரத்தில் கண்டு வரும் முன்னேற்றங்கள், தொடர்ச்சியாக நடந்து வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான திட்ட வரைபடம் குறித்து அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்தார்.

இதன்பிரகாரம், 2028 முதல் கடன் திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் போது, IMF வேலைத்திட்டத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் சவால்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கோடிட்டுக் காட்டினார்.

இதன் பொருட்டான பிராந்திய முதலீடு மற்றும் ஒத்துழைப்பால் ஆதரிக்கப்படும் ஒரு நிலைபேறான அபிவிருத்தி மூலோபாயத்தின் அவசியப்பாடு தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வர்த்தகம், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு பல யோசனைகளை இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன.

மேலும், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் கொள்ளவுத் திறனை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு, வலயமைப்பு தொடர்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துரைத்தார்.

பூட்டான் மற்றும் நேபாளத்துடனான இந்தியாவின் வெற்றிகரமான கூட்டாண்மையைப் பயன்படுத்திக் கொண்டு, மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பில் ஆராயும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சு வசதிகளைச் செய்து தரும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார்.

சமுத்திர, விமான இணைப்புச் சேவைகள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள இரு நாடுகளிடையேயான மின்சார இணைப்புக் கட்டமைப்பின் இடைத் தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு மதிப்பாய்வு செய்தனர்.

பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையையும், கடல்சார் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் பேணிச் செல்வதற்கு இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை உணர்ந்து, பிராந்திய பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் கண்டு வரும் இந்தியப் பெருங்கடல் சார் பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கத்தில் இலங்கையின் வகிபாகம் குறித்தும் இவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

மூலோபாய சமநிலை மற்றும் சுயாதீனத்தைப் பேணிக் கொண்டு, அனைத்து பங்குதாரர்களுடனும் வெளிப்படையாக தொடர்புகளைப் பேணி, நடைமுறைக்கு ஏற்ற அணிசேரா கொள்கைக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இங்கு வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு, இலங்கையின் ஸ்திரத்தன்மை இந்தியாவின் சொந்த பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு அவசியமாக அமைந்து காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டார்.

Related posts

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

editor

ரிஷாதிற்கு வவுனியாவில் அமோக வரவேற்பு

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவுக்கு பிணை

editor