இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (10) நிலநடுக்கம உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, டெல்லி, நொய்டா, உள்ளிட்ட பகுதிகளில் 4.4 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம உணரப்பட்டுள்ளது.
அத்துடன், உத்தர பிரதேசம், மீருட் மற்றும் சம்லி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நிலநடுக்கம உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள், நிலநடுக்கம உணரப்பட்டதை அடுத்து தமது வீடுகளிலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.