உலகம்

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTVNEWS | இந்தியா ) – இந்தியாவில் கொரோனா வைரசால் 649 பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள் முடங்கி உள்ளனர்.

எனினும் அங்கு புதிய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை கொரோனாவால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர்.அதிகளவில் மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பு!

கொரோனா வைரஸ்- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பு