உள்நாடு

இந்தியாவில் இருந்து மேலும் 143 மாணவர்கள் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – நாடு திரும்ப முடியாமல் இந்தியா புது டெல்லி நகரில் சிக்கியிருந்த 143 இலங்கை மாணவர்களுடன் கூடிய ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு எல் 1196 என்ற குறித்த விசேட விமானம் இன்று மதியம் 01.40 மணிக்கு இந்தியாவின் புதுடில்லி நகரில் இருந்து புறப்பட்ட நிலையில் குறித்த விமானம் மாலை 4.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இ‌வ்வாறு அழைத்து வரப்பட்ட மாணவ‌ர்க‌ள் அனைவரு‌ம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஹோமாகமவில் சடலம் மீட்பு!

editor

எரிபொருள் வரியை நீக்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – காஞ்சன

editor

ஜீப் வாகனம் மரத்தில் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

editor