இந்தியாவில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 149 புறாக்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கடற்படையினர் நடத்திய விசேட சோதனையின் போது, இந்தியாவில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்ட ஒரு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த பறவைகள் இராமேஸ்வரம் அல்லது அருகிலுள்ள இடத்திலிருந்து இலங்கை கடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் இந்த மீன்பிடி படகிற்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த படகின் இயக்குநரும் மற்றொரு நபரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, 149 புறாக்கள் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த புறாக்களில் ஒன்று ரூ.50,000 முதல் 100,000 வரை விற்க தயாராக இருந்ததாக தெரியவந்துள்ளது.