உலகம்

இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் திகதி பதவி விலகினார். இதையடுத்து வெற்றிடமான அந்தப் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணியுடன் முடிவடைந்தது. பிஜூ ஜனதா தளம், பாரத் ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்தன.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று இந்தியாவின் 17-வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

இந்திய துணை ஜனாதிபதியாக தேர்வான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சி : அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் மக்களுக்கு உரை

75 வதுகுடியரசு தினத்தை கொண்டாடும் இந்தியா!