உள்நாடு

இந்தியாவின் தலையீட்டால் ஆறு வருடங்களாக முடியவில்லை

(UTV | கொழும்பு) –  ஆறு வருடங்களாக தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புக்கான நாடுகளின் (சார்க்) மாநாட்டை நடத்த முடியாமல் போயுள்ளதாக வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இறுதியாக சார்க் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

“.. பிராந்திய நாடுகளில் ஒரு நாட்டின் எதிர்ப்பு காரணமாகவே சார்க் மாநாட்டை நடத்த முடியவில்லை. அந்த நாடு இந்தியா.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையில் நிலவி வரும் மோதலான நிலைமையே இதற்குக் காரணம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

இன்று மழையுடன் கூடிய காலநிலை

முதல் Green Super Supermarket இலங்கையில்