உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை நில அதிர்வு

(UTV|கொழும்பு) -இலங்கைக்கு தென்கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தில் இன்று(12) அதிகாலை 2.34 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றர்ருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது​.

10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் ஏற்பட்டுள்ள இந்த நில அதிர்வால் இலங்கைக்கு எவ்வித சுனாமி எச்சரிக்கையும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

ஆறாம் கட்ட கலந்துரையாடல் ஒத்திவைப்பு (UPDATE)

மகிந்தவின் இல்லத்திற்கு சென்ற சி.ஐ.டி