சூடான செய்திகள் 1

இந்தியப் பிரஜை விமான நிலையத்தில் மரணம்

(UTV|COLOMBO) கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் வௌிநாட்டவரொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தமிழகம் – இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் இந்தியாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்துள்ள நிலையில் , திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக இவ்வாறு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அங்கு அமைந்திருந்த கொங்க்ரீட் தூண் ஒன்றினை கட்டிப்பிடித்தப்படி குறித்த நபர் நின்றுள்ளார்.

எனினும் , பின்னர் அவர் குறித்த தூணில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

 

 

 

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் அவரது சகோதாரர் விளக்கமறியல் காலம் நீடிப்பு

இன்று முதல் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதனை இன்று